கோடை விடுமுறை குழந்தைகளுடைய சுதந்திர காலம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஏப்ரல் வரை தினமும் முழுமையான தூக்க மில்லாமல் அவசரகோலத்தில் எழுந்து பாதி வயிற்றை மட்டுமே நிரப்பிக்கொண்டு பள்ளிக்கூடங் களுக்கு சென்று பாடங்கள், தேர்வு, டியூஷன், வீட்டுப்பாடம் என வீடு முதல் பள்ளிவரை குழந்தைகள் ஓய்வின்றி உள்ளனர்.
இந்த குழந்தைகளுடைய மூளைக்கு சற்று ஓய்வு கொடுக்கக்கூடியதுதான் இந்த கோடை விடுமுறை.
ஆனால், பெரும்பாலான பெற் றோர்கள் கோடை பயிற்சி, அடுத்த கல்வியாண்டுக்கு முன் தயாரிப்பு என மீண்டும் குழந்தைகளுடைய சுதந்திரத்தை பறித்துக்கொள்கின்றனர்.
அதனால், குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகி அவர் களின் மூளை நரம்பு செல்கள் பாதிப்படையும் அபாயம் ஏற்படும். அத்துடன் நினைவாற்றல், கற்றல் திறன் குறையும் என திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழக கல்வியியல் துறை பேராசிரியர் ஜாகீதா பேகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் `தி இந்து’ விடம் கூறியதாவது: ‘‘மூளைக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை தரக்கூடிய அறிவார்ந்த பாடங் களைப் படித்து குழந்தைகள் சலிப் படைந்திருப்பர். கோடை விடுமுறை குழந்தைகள் மூளையை புத்து ணர்ச்சி செய்ய உதவுகிறது. மூளையில் `நார் எபி நெப்ரின்’ எனும் வேதிப்பொருளை அதிகளவு சுரக்கச் செய்து மனதையும், உடலை யும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.