Tag : NCTE

பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. “பொறியியல் மற்றும் பி.டெக் படித்த மாணவர்கள் ஆசிரியர் பட்டப் படிப்புகளை படிக்க முடியும்” என்று தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறியுள்ளார்.

ஆசிரியர் கல்விக்கான புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கல்லூரி தலைவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் சார்பில் 2 நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட சந்தோஷ் பாண்டா பேசியதாவது:

கடந்த 2009-ம் ஆண்டு வகுக் கப்பட்ட ஆசிரியர் கல்விக்கான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் நீதியரசர் வர்மா ஆணையத்தின் பரிந்துரைகள்படி கடந்த ஆண்டு மறுசீரமைக்கப்பட்டன. ஓராண்டு படிப்பாக இருந்த இளங்கலை மற்றும் முதுகலை ஆசிரியர் பட்டப் படிப்புகள், 2 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதற்கான திருத்தப் பட்ட கல்வித் திட்டமும், அரசா ணையும் கல்லூரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது. திருத்தப்பட்ட கல்வித் திட்ட அடிப்படையில் 2-ம் ஆண்டு பாடங்கள் குறித்து வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் கல்லூரிகள் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க…